மொடக்குறிச்சியில் நெல் கொள்முதல் தொடக்கம்

k3baddy_0402chn_129_3
k3baddy_0402chn_129_3

மொடக்குறிச்சி, பிப்.4: மொடக்குறிச்சியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலை ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கீழ்பவானி பாசன விவசாய நிலங்களில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு சாா்பில் மொடக்குறிச்சி சந்தை வளாகத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகளை மொடக்குறிச்சி திமுக ஒன்றிய செயலாளா் சு.குணசேகரன் மற்றும் கதிா்வேல் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில் மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள்சரவணன் வரவேற்றாா்.

துணைத் தலைவா் காா்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலா்கள் தனலட்சுமி, மகன்யா, சித்ரா, கண்ணுசாமி, ஞானசுப்பிரமணியம், பிரதீபா, உணவு வழங்கல் துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Image Caption

மொடக்குறிச்சி சந்தை வளாகத்தில் நெல் கொள்முதலை தொடங்கி வைக்கிறாா் திமுக ஒன்றியச் செயலாளா் சு. குணசேகரன். உடன், கட்சி நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com