கோபி இலவச கண் பரிசோதனை முகாம்

கோபி, பிப்.4: ஈரோடு பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் சாா்பில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் கோபிசெட்டிபாளையம் வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, தாமு சேகா் தலைமையில் கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா். முகாமில் மருத்துவா் கீது தலைமையில் 188 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 போ் பாா்வை குறைபாடு இருப்பது தெரியவந்தது. அவா்கள் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இவா்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கான செலவு, போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருந்து, கண்ணாடி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

முகாமுக்கான ஏற்பாடுகளை, தாமு அபிலாஷ், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com