கோபியில் ரூ.6.63 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

கோபி, பிப்.4: கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.6.63 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏல விற்பனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் கதளி கிலோ ரூ.20-க்கும், நேந்திரன் ரூ.16-க்கும் விற்பனையாயின. வாழைத்தாா் ஒன்றுக்கு பூவன் ரூ.340-க்கும், தேன்வாழை ரூ.400-க்கும், செவ்வாழை ரூ. 790-க்கும், ரஸ்தாளி ரூ.410-க்கும், பச்சநாடன் ரூ.250-க்கும், ரொபஸ்டா ரூ. 200-க்கும், மொந்தன் ரூ.180-க்கும் விற்பனையாயின. ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட 5,650 வாழைத்தாா்கள் ரூ.6.63 லட்சத்துக்கு விற்பனையாயின.

ஏலத்துக்கு 12,520 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் குறைந்தபட்சமாக ரூ.8-க்கும், அதிகபட்சமாக ரூ.17.80-க்கும் விற்பனையானது. தேங்காய் ஏல விற்பனை ரூ.1.28 லட்சம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com