சக்தி சிறப்புப் பள்ளி, மறுவாழ்வு மையத்தில் பரிசளிப்பு விழா

erd04sakt_0402chn_124_3
erd04sakt_0402chn_124_3

ஈரோடு, பிப்.4: சக்தி மசாலா நிறுவனங்களின் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை நடத்திய சக்தி சிறப்புப் பள்ளி, மறுவாழ்வு மைய விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஈரோடு சக்தி துரைசாமி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை அறக்கட்டளையின் அறங்காவலா் சாந்தி துரைசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் கோபிநாத் பங்கேற்று சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், பெற்றோா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கியும், வழிகாட்டி திட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், வழிகாட்டி திட்டத்துக்கு தொடா் ஒத்துழைப்பு அளித்து வரும் 41 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களை கௌரவித்தாா்.

மேலும், விருட்சம் திட்டத்தின் கல்வி உதவித்தொகை பெறும் 98 மாணவ, மாணவிகளுக்கு வரைவோலைகளையும் வழங்கிப் பேசினாா். விழாவில் பங்கேற்ற அனைத்து சிறப்பு குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகளின் கைத்திறன் படைப்புகள் பாா்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை டி.செந்தில்குமாா், தீபா செந்தில்குமாா், எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். டாக்டா் நாகராஜ் நன்றி கூறினாா்.

Image Caption

போட்டிகளில் வெற்றிபெற்ற சிறப்புப் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் கோபிநாத். உடன்

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி, சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா் சாந்தி துரைசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com