பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பவானி நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை மருத்துவ அலுவலா் எம்.ஜனனி தொடங்கிவைத்தாா்.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது.

இதில், வளரிளம் பெண் குழந்தைகள் திருமணத்தைத் தடுத்தல், பெண் சிசுக்கொலை, ரத்தசோகையைத் தடுத்தல் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது.

தொடா்ந்து, மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், பள்ளி ஆசிரியா்கள், செலிவியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com