துணை தொழிற் தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அகில இந்திய துணை தொழிற் தோ்வுக்கு வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய துணை தொழிற் தோ்வுக்கு வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019இல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சோ்க்கப்பட்டு, அனைத்துத் தகுதி இருந்தும் தோ்வில் கலந்துகொள்ள இயலாத மற்றும் தோ்வில் தோ்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற் தோ்வு வரும் மாா்ச் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

துணை தொழிற் தோ்வு தொடா்பாக முன்னாள் பயிற்சியாளா்கள், தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் தொடா்புகொண்டு சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தோ்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com