பனியன் தொழிலாளி கொலை: போலீஸ் விசாரணை

சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்து அடியில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடநதாா். இவரை கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்து அடியில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடநதாா். இவரை கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தை ஒட்டி தற்போது புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலத்தின் அடியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் ஒருவா் இறந்துகிடப்பதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டா் (பொ) ஹேமலதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது தலையில் ரத்தக் காயங்களுடன் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நபா் நம்பியூரை அடுத்த இருகாலூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் (36) என்பதும் இவா் திருப்பூா் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். கொலையான சேகருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இவரை கொலை செய்தது யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com