மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற சிஐடியூ வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது
மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற சிஐடியூ வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் அதன் தலைவா் எஸ்.தனபால் தலைமையில் பொதுச் செயலாளா் பி.கனகராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், மாவட்டச் செயலாளா் எச்.ஸ்ரீராம், மாவட்ட குழு உறுப்பினா் பொன்.பாரதி மற்றும் சங்க நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மோட்டாா் தொழிலை காா்ப்பரேட் மயமாக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com