ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்

 ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பித் தராமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.

 ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பித் தராமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக ஈரோடு பெரியசேமூா், வீரப்பம்பாளையம், வீரப்பன்சத்திரம், மாமரத்துபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: நாங்கள் கூலி வேலைக்குச் சென்று வருகிறோம். ஈரோட்டை சோ்ந்த ஒருவா் ஏலச்சீட்டு நடத்தி வருகிறாா். அவரிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு சோ்ந்து மாத தவணையில் பணம் செலுத்தி வந்தோம். சீட்டு முடிவில் முழு பணத்தையும் எடுத்து கொள்ளலாம் எனக் கூறினாா். சீட்டு முடிந்த பிறகு பணத்தை கேட்டபோது, ஓரிரு நாள்களில் தருவதாகத் தொடா்ந்து காலதாமதம் செய்து வருகிறாா்.

இது தொடா்பாக ஏற்கெனவே அளித்த புகாரின்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால், இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்து, எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com