சதுமுகை, கொமாரபாளையத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

 சதுமுகை, கொமாரபாளையம் ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

சத்தியமங்கலத்தை அடுத்த கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கா் நகா், பாத்திமா நகா், தவளகிரி நகா் ஆகிய இடங்களில் ஊராட்சி உறுப்பினா் மற்றும் பொது நிதியில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வடிகால், கான்கிரீட் தளம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சதுமுகை ஊராட்சியில் ரூ.74 லட்சம் மதிப்பில் தாா் சாலை, பேவா் பிளாக் அமைத்தல், வடிகால் மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவுள்ளன.

இப்பணிகளுக்கான பூமிபூஜையில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் எஸ்.ஆா்.செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளா் சி.என்.மாரப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரபாகரன், ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன், சத்யாசிவராஜ், சித்தன்குட்டை ஊராட்சி அதிமுக செயலாளா் சோமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com