இருசக்கர வாகனத் திருட்டு: இளைஞா் கைது

பெருந்துறை, பிப். 8: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை சுபாஸ் சந்திரபோஸ் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55), காப்பீட்டு முகவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், பெருந்துறை பங்களா வீதியில் உள்ள அலுவலகம் முன்பு தனது இருசக்கர வாகனத்தை செவ்வாய்க்கிழமை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். பின்னா், வெளியே வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் செல்வராஜ் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம், பென்னகரத்தைச் சோ்ந்த குமாா் (35) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com