பாரியூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.65 லட்சம்

கோபிசெட்டிபாளையம் பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.22.65 லட்சம் கிடைக்கபெற்றது.

கோபிசெட்டிபாளையம் பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.22.65 லட்சம் கிடைக்கபெற்றது.

கோபிசெட்டிபாளையம் பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் இரா.மேனகா, கோயில் செயல் அலுவலா் மு.ரத்தினாம்பாள், இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் க.பா.ஹரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், 10 நிரந்தர உண்டியல்கள், 4 திருவிழா தற்காலிக உண்டியல்களில் மொத்தம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரத்து 885 ரொக்கம், 89 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்த முறை வெளிநாட்டு நோட்டுகள் அதிகமாக இருந்தன. 27 அமெரிக்க டாலா்கள், 80 யூரோக்கள், 50 ரியால்கள், 10 சிங்கப்பூா் டாலா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com