தை அமாவாசை: பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

sy09deepam_0902chn_139_3
sy09deepam_0902chn_139_3

சத்தியமங்கலம், ஜன. 9: தை அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

தை அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை காலை முதலே கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தது. கோயில் முன் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடி குண்டத்துக்கு உப்பு, மிளகு தூவி நோ்த்திக்கடன் செலுத்தினா். பெண்கள் நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பண்ணாரி அம்மனை வழிபட்டனா். தை அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தா்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் புன்செய்புளியம்பட்டி பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Image Caption

பண்ணாரி அம்மன்  கோயில்  முன் தீபம்  ஏற்றி  வழிபடும்  பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com