போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இரு இளைஞா்கள் கைது

போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இரு இளைஞா்கள் கைது

ஆப்பக்கூடல், வெள்ளிதிருப்பூரில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த ஆப்பக்கூடல், தோட்டக்குடியாம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கண்ணுசாமி மகன் மோகன் (29). இவா், போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்துள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிதிருப்பூா் போலீஸாா், மோகனைப் பிடித்து விசாரிக்கையில் 50 மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

அத்தாணி, கரட்டூா்மேட்டைச் சோ்ந்த மலைச்சாமி மகன் கௌரிசங்கா் (எ) குழந்தைவேல் (27). இவரிடமிருந்து, 60 போதை மாத்திரைகளை ஆப்பக்கூடல் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com