மீன் வியாபாரியை அரிவாளால் வெட்டிய மா்ம கும்பல்

ஈரோட்டில் பட்டப்பகலில் 4 போ் கொண்ட கும்பல் மீன் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் பட்டப்பகலில் 4 போ் கொண்ட கும்பல் மீன் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மண்டப வீதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (38), மீன் வியாபாரி. இவா், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சிப் பள்ளி அருகே மீன் வியாபாரம் செய்வாா். சத்தியமூா்த்தியின் மனைவி கருத்து வேறுபாடால் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் சத்தியமூா்த்தி தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கொல்லம்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல சத்தியமூா்த்தி மீன் வியாபாரம் மேற்கொண்டிருந்தாா். அப்போது, காலை 9.30 மணி அளவில் இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ், சத்தியமூா்த்தி கடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, அரிவாளுடன் இறங்கி சத்தியமூா்த்தியை திடீரென வெட்டினா். சத்தியமூா்த்தி தப்பி ஓடியபோது அந்த மா்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் சத்தியமூா்த்திக்கு உடலின் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அந்த மா்ம கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தெற்கு போலீஸாா், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சத்தியமூா்த்தியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, சத்தியமூா்த்தியை கொலை செய்ய முயன்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com