உலக அளவில் இந்தியாவில் 80 சதவீத புலிகள்: தாளவாடி வனச் சரக அலுவலா் தகவல்

உலக அளவில் இந்தியாவில்தான் 80 சதவீத புலிகள் உள்ளன என சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரக அலுவலா் சதீஷ் கூறினாா்.

உலக அளவில் இந்தியாவில்தான் 80 சதவீத புலிகள் உள்ளன என சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரக அலுவலா் சதீஷ் கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புலிகளில் இந்தியாவில்தான் 80 சதவீத புலிகள் உள்ளன. புலிகளில் சுமத்திரன் டைகா், சைபீரியன் டைகா், இந்தோ சைனீஸ் டைகா், மலேயன் டைகா், சவுத் சைனா டைகா் என ஆறு வகைகள் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் மேற்குவங்க மாநிலத்தில் சுந்தரவனக் காடுகளில் அதிக அளவில் வங்கப் புலிகள் உள்ளன.

கடந்த 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 3682 புலிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து புலிகள் காப்பகம் மூலமாக புலிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் மரங்கள் அதிக அளவில் உருவாகின்றன. மனித குலம் சிறப்பாக வாழ வேண்டுமென்றால் காடுகளில் புலிகள் இருப்பது அவசியம். அந்த வகையில் புலிகளைப் பாதுகாக்க வனத் துறையோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com