சாலைப் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சாலைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சாலைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளா் ரங்கநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: சாலைப் பணியாளா்கள் போராட்டத்தின்போது 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை ரூ. 1,900 ஆக உயா்த்தி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com