அந்தியூரில் ரூ.18.61 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.18.61 லட்சத்துக்கு விற்பனையாயின.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.18.61 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 4,613 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ. 18.25 முதல் ரூ.25.75 வரையில் ரூ.39,442-க்கும், 47 மூட்டை கொப்பரை, கிலோ ரூ.78.91 முதல் ரூ.89.79 வரையில் ரூ.1,31,202-க்கும், ஒரு மூட்டை எள் கிலோ ரூ.148.79 வீதம் ரூ.8,183-க்கும் ஏலம்போனது. ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ ரூ.61.79 வீதம் ரூ.896-க்கும், 193 மூட்டை துவரை கிலோ ரூ.96.09 முதல் ரூ.113.89 வரையில் ரூ.14,39,206-க்கும், ஒரு மூட்டை தட்டப்பயறு கிலோ ரூ.69.89 முதல் ரூ.78.89 வரையில் ரூ.2,935-க்கும், 9 மூட்டை பச்சைப்பயறு கிலோ ரூ.122.75 முதல் ரூ.126.99 வரையில் ரூ.77,981-க்கும், 4 மூட்டை உளுந்து கிலோ ரூ.89.15 முதல் ரூ.92.46 வரையில் ரூ.25,423-க்கும், 6 மூட்டை கொள்ளு கிலோ ரூ.62.19 முதல் ரூ.63.66 வரையில் ரூ.31,990-க்கும், 15 மூட்டை நரிப்பயறு கிலோ ரூ.90.22 முதல் ரூ.95.26 வரையில் ரூ.99,811-க்கும், ஒரு மூட்டை அவரை கிலோ ரூ.108.15 வீதம் ரூ.4,434-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.18,61,503 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com