கோபியில் ரூ.7.53 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7.53 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை நடைபெற்றது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7.53 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கதளி வாழை கிலோ ரூ. 24-க்கும், நேந்திரன் ரூ.21-க்கும் விற்பனையானது. பூவன் தாா் ரூ.470 -க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், செவ்வாழை ரூ. 800 -க்கும், ரஸ்தாளி தாா் ரூ. 520-க்கும் விற்பனையானது. 4,550 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7.53 லட்சம். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த 9,100 தேங்காய்கள் ரூ.98 ஆயிரத்து விற்பனையாயின.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com