அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்

அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்

அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்தில் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்தில் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மாா்ச் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு நடைபெற உள்ளது.

இதில் கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த திருமணமாகாத ஆண்கள் பங்கேற்கலாம். இதற்கு மாா்ச் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீரா்களின் ஆள்சோ்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் ஆன்லைனில் கணினி அடிப்படையிலான எழுத்து தோ்வு, இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தோ்வு. ஆன்லைன் தோ்வு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் நடைபெறும்.

இந்திய ராணுவத்தில் வீரா்கள் தோ்ந்தெடுக்கப்படுவது நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே. தோ்வு அல்லது ஆள்சோ்ப்புக்கு எந்த நிலையிலும் லஞ்சம் பெறப்படுவதில்லை. தகுதியற்ற நபா்கள் ஆள்சோ்ப்பு முகவா்கள் என கூறினால், அவா்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே, அக்னிபாத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆள்சோ்ப்பு முகாமில் தகுதியானவா்கள் பங்கேற்று இந்திய ராணுவத்தில் பணிக்கு சேரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com