ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா தொடக்கம்

ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.


ஈரோடு: ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை (ஜனவரி 17) காலை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து மூலவா் எதிரே உள்ள கோயில் கொடிமரத்தில் கோயில் பூசாரிகள் திருவிழா கொடியேற்றுவா்.

தொடா்ந்து தினமும் மாலையில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 23-ஆம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 24-ஆம் தேதி மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருதலும் நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அன்றைய தினம் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.45 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து தோ் முக்கிய வீதிகள் வழியாக கோயிலில் நிலை வந்து சேருகிறது. 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலாவும், காலை 11 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலா் முத்துசாமி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com