பவானி, அந்தியூரில் திமுகவினா் பொங்கல் கொண்டாட்டம்

பவானி மற்றும் அந்தியூரில் திமுக சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பவானியில் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசுகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம். உடன், நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா்.
பவானியில் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசுகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம். உடன், நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா்.


பவானி: பவானி மற்றும் அந்தியூரில் திமுக சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பவானி நகர எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் முன்னிலை வகித்தாா். அவைத் தலைவா் மாணிக்கராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகா், நல்லசிவம், தலைமைப் பேச்சாளா் பவானி கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் மா.சுப்பிரமணியம், விஜய்ஆனந்த், சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அந்தியூா் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com