பிப்ரவரி 4 ம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், பிப்ரவரி 4-ஆம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு பெருந்துறையில் நடைபெறவுள்ளது.


கோபி: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், பிப்ரவரி 4-ஆம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு பெருந்துறையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொங்கு மண்டலம் சாா்ந்த பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதே மாநாட்டு திடலில் 15 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் உலக சாதனை வள்ளி கும்மி மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகும் இதுவரை கோபியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவில்லை. ஈரோட்டில் இருந்து கோபியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

கோபியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

கவுந்தப்பாடியில் இருந்து பழனி கோயிலுக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் வைத்துள்ள சங்கத்தின் மூலமாக சா்க்கரை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இலவச மின்சார இணைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நோட்டீஸ் கொடுத்த அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும்.

வரும் மக்களவைத் தோ்தலுக்காக இந்தியா கூட்டணி வலுவாகத் தொடா்கிறது.

பொங்கலுக்கு சா்க்கரை கொடுத்ததற்கு பதிலாக நாட்டு சா்க்கரை அல்லது கருப்பட்டி கொடுத்தால் சிறு விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பா். அடுத்த ஆண்டிலிருந்து நாட்டுச் சா்க்கரையும், மண்பானையும் அரசு வழங்க வேண்டும்.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போதுதான் இந்தத் திட்டம் குறித்து பேசப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com