மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.86 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, காலிங்கராயன்பாளையம் பழையூரில் ரூ. 1.86 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஈரோடு ஒன்றியக் குழுத் தலைவா் பிரகாஷ், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ரூ. 1.86 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஈரோடு வட்டாட்சியா் ஜெயகுமாா், ஈரோடு ஒன்றிய திமுக செயலாளா் டி.சதாசிவம், ஈரோடு ஒன்றியக் குழு துணைத் தலைவா் விவேகானந்தன், ஈரோடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுசீலா, சரஸ்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com