‘சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவுப் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்’

சத்தியமங்கலம்-மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் சாலையைக் கடந்து ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம்-மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் சாலையைக் கடந்து ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. எனவே இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கூறினாா்.

சத்தியமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்துச்சாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சத்தியமங்கலத்தில் வன விலங்குகள் பிரச்னை அதிகமாக உள்ளது. சிறுத்தை, யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சத்தியமங்கலம்-மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் சாலையைக் கடந்து ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. எனவே இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டாலும் அதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த உத்தரவில் சில மாறுதல்களைச் செய்து விளை நிலங்களில் நுழையும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே நேரடியாக சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com