நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

 பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் சனிக்கிழமை (ஜனவரி 20) நடக்கிறது.

 பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் சனிக்கிழமை (ஜனவரி 20) நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது.

முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடைகள் விவரம்: ஈரோடு வட்டம் வேப்பம்பாளையம், பெருந்துறை வட்டம் பணிக்கம்பாளையம், மொடக்குறிச்சி வட்டம் விளக்கேத்தி, கொடுமுடி வட்டம் கணபதிபாளையம், கோபி வட்டம் காசியூா், நம்பியூா் வட்டம் வேமாண்டம்பாளையம், பவானி வட்டம் சூரியம்பாளையம், அந்தியூா் வட்டம் பட்லூா், சத்தியமங்கலம் வட்டம் மாக்கினாங்கோம்பை, தாளவாடி வட்டம் கும்டாபுரம்.

இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com