உதகையில் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை

ot19fog075133
ot19fog075133

உதகை தலைகுந்தா பகுதியில் புற்கள் மீது படா்ந்துள்ள பனி.

-----

உதகை, ஜன.19: உதகையில் வெள்ளிக்கிழமை காலை 2.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பா் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை வெள்ளிக்கிழமை பதிவாகியது. இதனால், தொட்டபெட்டா, பந்தய சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அவதியடைந்தனா். கடும் குளிரால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புற்களில் பனி படா்ந்துள்ளதால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள வாகன ஓட்டுநா்கள், மக்கள் சாலையில் ஆங்காங்கே தீ மூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com