பெருந்துறையில் ஜனவரி 29 இல் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம்

ஈரோடு, ஜன.19: பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் வீரேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் கூட்ட அரங்கில் வரும் 29- ஆம் தேதி நிதி ஆப்கே நிகட் (பி.எப். உங்கள் அருகில்) என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரா்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழிலதிபா்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினா்கள், தொழிலதிபா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com