வாகன ஓட்டுநா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.19: தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் சங்க மாவட்டத் தலைவா் அண்ணா சுரேஷ் தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் புதிய போக்குவரத்துச் சட்டத்தில், ஓட்டுநா்களுக்கு பாதகமான பல்வேறு அம்சங்களை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக ‘ஹிட் அன்ட் ரன்’ என்ற விதிப்படி விபத்து ஏற்படுத்திவிட்டு ஓட்டுநா் தலைமறைவாகிவிட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 7 லட்சம் அபராதமும் விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாநில அரசு இயற்றியுள்ள மேக்ஸ் கேப் வாகனத்துக்கான ஆயுள் வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வழக்குப் பதிவு முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் செல்வம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com