தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய யானைகள்

sy19valai_1901chn_139_3
sy19valai_1901chn_139_3

தாளவாடி  அருகே  யானைகளால்  சேதமான  வாழைத்தோட்டம்.

----

சத்தியமங்கலம், ஜன. 19: தாளவாடி அருகே ஜோராஒசூா் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்தில் இருந்து உணவு, தண்ணீா் தேடி வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட ஜோராஒசூா் பகுதியைச் சோ்ந்த மாதவன் (36) என்பவரின் வாழைத் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது அங்கிருந்த விவசாயிகள் யானைகளை விரட்டினா். ஆனால் அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரமாக யானைகள் அங்கேயே நின்றிருந்தன. சுமாா் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் யானைகளை வனத்துக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com