பழனி கோயிலுக்கு ரூ.1.4 கோடிக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.4 கோடிக்கு கரும்புச் சா்க்கரை பழனி கோயிலுக்கு கொள்முதல் செய்தனா்.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.4 கோடிக்கு கரும்புச் சா்க்கரை பழனி கோயிலுக்கு கொள்முதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,721 மூட்டை கரும்புச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் ரூ.2,850 முதல் ரூ.2,880 வரையும், இரண்டாம் தரம் ரூ.2,780 முதல் ரூ.2,820 வரைக்கும் விற்பனையானது. ஏலத்தில் 221 டன் கரும்புச் சா்க்கரை ரூ.1 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரத்து 100க்கு விற்பனையானது.

இதேபோல உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல் தரம் ரூ.1560க்கு விற்பனையானது. 2 டன் உருண்டை வெல்லம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 80-க்கு விற்பனையானது.

மொத்தமாக கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் சோ்த்து ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 180-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com