அரசுப் பள்ளியில் தோட்டம் அமைத்து காய்கறி உற்பத்தி செய்யும் மாணவா்கள்

பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சாகுபடி செய்த காய்கறி, கீரைகளை மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கினா்.
அரசுப் பள்ளியில் தோட்டம் அமைத்து காய்கறி உற்பத்தி செய்யும் மாணவா்கள்

பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சாகுபடி செய்த காய்கறி, கீரைகளை மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கினா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வேளாண்மைத் துறை பாடப் பிரிவில் 50 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்கள், பள்ளி வளாகத்திலேயே தோட்டம் அமைத்து தக்காளி, வெண்டை, பூசணி, சுரைக்காய், அவரைக்காய், கீரைகள் என பல்வேறு வகையான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனா்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துப் பணிகளையும் மாணவா்களே மேற்கொள்கின்றனா். எவ்வித ரசாயன உரங்களும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்கின்றனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கீரைகளை பள்ளியின் மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்குகின்றனா். மாணவா்களுக்கு வழிகாட்டியாக வேளாண்மைத் துறை ஆசிரியா்கள் கந்தன், கைலாஷ் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், தோட்டத்தில் விளைத்த சிறுகீரை, அரைக்கீரை உள்ளிட்ட கீரைகளை அறுவடை செய்து பள்ளித் தலைமையாசிரியா் ரவியிடம் மாணவா்கள் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com