சென்னிமலை அருகே ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்

சென்னிமலை ஒன்றியம், தென்முகம் வெள்ளோடு ஊராட்சி, சிறுவன்காட்டுவலசு ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21pe_02_2101chn_147_3
21pe_02_2101chn_147_3

சென்னிமலை ஒன்றியம், தென்முகம் வெள்ளோடு ஊராட்சி, சிறுவன்காட்டுவலசு ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள், சிற்பங்களுக்கு கண் திறத்தல், கோபுரத்தில் கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித தீா்த்தம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ராஜகணபதிக்கு 108 மூலிகை திரவிய ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் வெள்ளோடு சா்வ லிங்கேஸ்வரா் கோயில் அா்ச்சகா் எஸ்.மூவேந்தர குருக்கள் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

இதில் தென்முகம் வெள்ளோடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com