பெருந்துறை ஸ்ரீசுவாமி விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா

21pe_01_2101chn_147_3
21pe_01_2101chn_147_3

பெருந்துறை ஸ்ரீசுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சம்பத் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் சின்னசாமி, மாவட்ட தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலா் ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் சென்னியப்பன் வரவேற்றாா். முதல்வா் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில், தனியாா் பள்ளிகளின் இணை இயக்குநா் எஸ்.சாந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பள்ளி துணைத் தலைவா் விஸ்வநாதன், இணை செயலாளா்கள் கலாதேவி, கீதா உள்பட பலா் பங்கேற்றனா். பள்ளி பொருளாளா் மாணிக்கமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com