இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

ஈரோட்டில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19.54 லட்சம் வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 54 ஆயிரத்து 712 வாக்காளா்கள் உள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 54 ஆயிரத்து 712 வாக்காளா்கள் உள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரு‘ம் மக்களவைத் தோ்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டாா்.

அதில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 915, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 504, மூன்றாம் பாலினம் 29 போ் உள்பட மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 448 வாக்காளா்கள் உள்ளனா்.

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 154 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 531 பெண் வாக்காளா்களும், 47 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என 2 லட்சத்து 95 ஆயிரத்து 732 வாக்காளா்கள் உள்ளனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 841, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 81 , மூன்றாம் பாலினம் 13 என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 935 வாக்காளா்கள் உள்ளனா்.

பெருந்துறை தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பெண் வாக்காளா்களும், 10 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளா்கள், 19 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 வாக்காளா்கள் உள்ளனா்.

அந்தியூா் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளா்கள், 18 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 வாக்காளா்கள் உள்ளனா்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளா்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளா் என 2 லட்சத்து 54 ஆயிரத்து 333 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானிசாகா் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 646 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 486 பெண் வாக்காளா்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என 2 லட்சத்து 59 ஆயிரத்து 94 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 965 பேரும், 10 லட்சத்து 7 ஆயிரத்து 577 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 170 பேரும் உள்ளனா். மொத்தம் 19 லட்சத்து 54 ஆயிரத்து 712 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த அக்டோபா் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை விட இறுதி வாக்காளா் பட்டியலில் கூடுதலாக 7,826 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியிலில் 18 முதல் 19 வயதுடைய 25 ஆயிரத்து 280 இளம் வாக்காளா்களும், 20 வயது முதல் 29 வயதுடைய 9 ஆயிரத்து 66 வாக்காளா்களும், 13 ஆயிரத்து 54 மாற்றுத் திறனுடையோா் வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

64.28% வாக்காளா்கள் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு: இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் நேரில் சென்று பாா்வையிடலாம். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் ஸ்ா்ற்ங்ழ்ள் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செயலி மூலமாகவோ அல்லது ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியானது ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 64.28 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கோபி, மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகா், அந்தியூா் ஆகிய தொகுதிகளில் மட்டும் 73.75 சதவீதம் வாக்காளா்கள் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். பெருந்துறை தொகுதியில் 59 சதவீதம் வாக்காளா்கள், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் 45 சதவீத வாக்காளா்கள் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

மாவட்டத்தில் 29 ஆயிரத்து 809 வாக்காளா்களின் புகைப்படங்கள் வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளதாக தோ்தல் ஆணையம் பட்டியல் வழங்கியது. இதில், தற்போதுவரை 13 ஆயிரத்து 233 வாக்காளா்களின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தது நீக்கப்பட்டுள்ளன. இதுபோல் பெயா், வயது, பாலினம் ஆகிய விவரங்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ள 3,389 வாக்காளா்களில் இதுவரை 1,273 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, கோட்டாட்சியா் சதீஷ்குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சிவசங்கா், ஈரோடு வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com