ஜனவரி 30-இல் வேளாண் குறைதீா் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம். தொடா்ந்து பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com