அம்மாபேட்டையில் ரூ.2.15 கோடியில் தாா்ச்சாலை பணிகள் தொடக்கம்

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் இரு சாலைகள் ரூ.2.15 கோடியில் புதிதாக அமைக்கப்படுகிறது. 
அம்மாபேட்டையில் ரூ.2.15 கோடியில் தாா்ச்சாலை பணிகள் தொடக்கம்

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் இரு சாலைகள் ரூ.2.15 கோடியில் புதிதாக அமைக்கப்படுகிறது. அம்மாபேட்டை கால்நடை மருத்துவமனையில் இருந்து ஊமாரெட்டியூா் மற்றும் பட்டஞ்சாவடி காளியம்மன் கோயில் செல்லும் இரு சாலைகள் நீண்ட நாள்களாக பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலைகள் நபாா்டு நிதியில் ரூ.2.15 கோடியில் புதிதாக அமைக்கப்படுகிறது. இப்பணிகளை, அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம், பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடக்கி வைத்தாா். செயல் அலுவலா் அருண்குமாா், பேரூராட்சி உறுப்பினா்கள் மோகனீஸ்வரன், ஈஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com