ஈரோட்டில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு

ஈரோட்டில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இளம் வாக்காளருக்கு வாக்காளா் அடையாள அட்டையை வழங்குகிறாா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
இளம் வாக்காளருக்கு வாக்காளா் அடையாள அட்டையை வழங்குகிறாா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

ஈரோட்டில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஈரோடு கோட்ட மாநில வரி இணை ஆணையா் லஷ்மிபவியா தண்ணீரு முன்னிலை வகித்தாா். ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: வாக்களிப்பதின் அவசியம் குறித்து அனைத்து வாக்காளா்களும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தோ்தல் ஆணையம் சாா்பில் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை கொண்ட வாக்காளா் பட்டியலை சரிசெய்து, பட்டியலை செம்மைபடுத்திய பணிக்காக மாவட்டத்துக்கு விருது கிடைத்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து இளம் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், இளம் வாக்காளா்கள், மூத்த வாக்காளா்கள், விளிம்புநிலை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா், மூன்றாம் பாலின வாக்காளா்கள் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளா் தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தோ்தல் விழிப்புணா்வு வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.குருநாதன், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கா், ஈரோடு வட்டாட்சியா் ஜெயகுமாா், கோமதி (யங் இந்தியா அசோசியேசன்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com