தொடா் விடுமுறையால் ஈரோடு பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

தைப்பூசம், குடியரசு தினம்  என தொடா்ந்து நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஈரோடு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில்   பயணிகள் கூட்டம்  அதிகரித்து காணப்பட்டது.

தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடா்ந்து நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஈரோடு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கடந்த இரு நாள்களாக பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொடா்விடுமுறையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊருக்கு மக்கள் செல்ல தொடங்கினா். ஈரோடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை முதலே பயணிகள் கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. மதுரை, திருநெல்வேலி செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு ஊா்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஈரோடு ரயில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதேபோன்று, வியாழக்கிழமை காலையும் பேருந்து நிலையத்தில் வெளியூா் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com