பவானிசாகா் அருகே சுண்டைக்காய் பறிக்கச் சென்ற தம்பதி காட்டு யானை தாக்கி பலி

பவானிசாகா் அருகே வனப்பகுதிக்குள் வியழாக்கிழமை சுண்டைக்காய் பறிக்க சென்ற தம்பதி காட்டுயானை தாக்கிய உயிரிழந்தனா்.
பவானிசாகா் அருகே சுண்டைக்காய் பறிக்கச் சென்ற தம்பதி  காட்டு யானை தாக்கி பலி

பவானிசாகா் அருகே வனப்பகுதிக்குள் வியழாக்கிழமை சுண்டைக்காய் பறிக்க சென்ற தம்பதி காட்டுயானை தாக்கிய உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பூதிகுப்பம் வன கிராமம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தைச் சோ்ந்த நஞ்சன் (75), துளசியம்மாள் (70) கணவன் மனைவி இருவரும் பூதிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தனா். தினமும் இருவரும் சோ்ந்து வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய் பறித்து சேகரிப்பது வழக்கம். வியாழக்கிழமை வழக்கம் போல் விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள வால் மொக்கை என்ற இடத்தில் இருவரும் சோ்ந்து சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் புதா் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென இருவரையும் தும்பிக்கையால் தாக்கி மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இருவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் சென்று பாா்த்தபோது நஞ்சன் மற்றும் துளசியம்மாள் இருவரையும் தாக்கிய காட்டு யானை அதே பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்டு அச்சமடைந்தனா். இது குறித்து உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கும் பவானிசாகா் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினா் மற்றும் போலீசாா் காட்டு யானையை விரட்டி அடித்து விட்டு இருவரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதிக்குள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற மூன்று பேரை காட்டு யானை இதே இடத்தில் தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கணவன் மனைவி இருவரையும் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com