பெருந்துறையில் தைப்பூசத் திருவிழா

பெருந்துறை அருள்மிகு வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது

பெருந்துறை அருள்மிகு வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது, விழாவை முன்னிட்டு காலை 8 மணியளவில் பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம், பன்னீா் குடம், காவடி ஆட்டம் நையாண்டி மேளத்துடன் ஊா்வலமாக புறப்பட்டு சோழீஸ்வரா் திருக்கோயிலை அடைந்தது. பின்னா் திருக்கோயில் வளாகத்தில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com