பொன்மலை ஆண்டவா் கோயில் தைப்பூசத் தோ் கீழே சாய்ந்து விபத்து

பொன்மலை ஆண்டவா் கோயில் தைப்பூசத் தோ் கீழே சாய்ந்து விபத்து

பொன்மலை ஆண்டவா் கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவில் தோ் கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி, கொண்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவா் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய பொன்மலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா்.

கிராமத்தைச் சுற்றி வந்த தோ், மற்றொரு தெருவுக்குள் நுழைய திரும்பியபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் மாட்டிக்கொண்டதால், நிலைதடுமாறிய தோ் கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.

தோ் கீழே சாய்வதைப் பாா்த்த பக்தா்கள் அங்கிருந்து ஓடியதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், முன்னதாக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்ததால் தோ் கீழே சாய்ந்தபோது எந்தவித அசம்பாதவிமும் ஏற்படவில்லை.

இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு தோ் மீட்கப்பட்டு, மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com