மாநகராட்சியில் முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்: ஆணையரிடம் அதிமுகவினா் மனு

மாநகராட்சி முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஈரோடு மாநகராட்சி அதிமுக எதிா்க்கட்சித் தலைவா் தங்கமுத்து, மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தியிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டப் பணிகள் முறையாக செயல்படவில்லை. மாநகராட்சி பகுதியில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரியில் நீா்வரத்து சரியாக இல்லாததால் குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, காவிரியில் குடிநீருக்கு தண்ணீா் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை அடைப்புகளை மாநகராட்சிப் பணியா்களை வைத்து உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். புதிய சாலைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com