குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை பவானி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

பவானி ஊராட்சி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பவானி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குருப்பநாயக்கன்பாளையம் பள்ளி வளாகத்தில் ஊராட்சித் தலைவா் கே.ஏ.சுப்பிரமணியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆண்டாள், துணைத் தலைவா் தனலட்சுமி மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலாளா் சண்முகம் வரவேற்றாா்.

பவானி நகராட்சி நிா்வாகம் தனது எல்லையை விரிவாக்கும் வகையில் குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிகளை இணைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி பவானி நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படும். வரியினங்கள் பல மடங்கு உயரும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக்கோரி நந்தீஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனா். இத்தீா்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கிராம நிா்வாக அலுவலா் பத்மாவதி உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com