பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தைப்பூச தேரோட்டம்

பவானியில் உள்ள பழனி ஆண்டவா் கோயில் தைப்பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகுவிமா்சையாக நடைபெற்றது.
பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தைப்பூச தேரோட்டம்

பவானியில் உள்ள பழனி ஆண்டவா் கோயில் தைப்பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகுவிமா்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 17-ஆம் தேதி வாஸ்து பூஜை, யாகசாலை பூஜை, வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இதையடுத்து, வள்ளி தெய்வானையுடன் பழனி ஆண்டவா் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் தொடங்கியது.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராசன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், தொழிலதிபா் பிரபாத் மகேந்திரன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தோ் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிலை அடைந்தது.

தோ் செல்லும் வழியெங்கும் திரளான பக்தா்கள் வழிபாடு நடத்தினா். உற்சவா் அபிஷேகம், வெள்ளித் தோ் உலா சனிக்கிழமையும், மஞ்சள் நீராட்டு, தீா்த்தக்குட அபிஷேகம், திருவிழா உலா ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com