ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் முறிந்து விழுந்ததில் சனிக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் முறிந்து விழுந்ததில் சனிக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம்- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாநில சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றால் அரேப்பாளையம் பிரிவு பகுதியில் சாலையோரம் இருந்த மூங்கில்தூா் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் தமிழகம்- கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் தீயணைப்புத் துறையினா் மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். மூங்கில்தூா் சாலையில் விழுந்ததால் தமிழகம்- கா்நாடகம் இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com