மயிலம்பாடியில் ரூ.7.23 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானி, ஜன. 27: பவானியை அடுத்த மயிலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.23 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு, 61 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளை ரகம் ரூ.137.19 முதல் ரூ.185.39 வரையும், சிவப்பு ரகம் ரூ.102.19 முதல் ரூ.162.69 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4,293 கிலோ எள் ரூ.7,23,625-க்கு விற்பனையானது.

தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.54.69 முதல் ரூ.70.69 வரையும், ஒரு மூட்டை துவரை கிலோ ரூ.86.19-க்கும், நிலக்கடலை காய் கிலோ ரூ.70.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7.39 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com