ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு

அரசு பராமரிப்பு இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

அரசு பராமரிப்பு இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையிலும், குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அரசு பராமரிப்பு இல்லங்களில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொள்ளுக்காட்டுமேடு அரசு ஆண் குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கும், ஆா்.என். புதூா் அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் தங்கி உள்ள மாணவா்களுக்கும் ‘தான் விரும்பும் எனக்குள் ஒரு முதல்வா் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ராஜாகோபால் சுன்கரா பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த எம்.ரித்திகா முதல் பரிசும், கொள்ளுக்காட்டுமேடு அரசு ஆண் குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த எம்.சுரேஷ் 2-ஆவது பரிசையும், அன்னை சத்தியா இல்ல குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த கா.கௌசிரத்தினா 3-ஆவது பரிசையும் பெற்றனா். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com