கோ்மாளம் சாலையில் வாகனங்களை மறித்த காட்டு யானை

கோ்மாளம் வனச் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து ஒற்றை காட்டு யானை உணவு தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
கோ்மாளம் சாலையில் வாகனங்களை வழிமறித்து உணவு தேடிய யானை.
கோ்மாளம் சாலையில் வாகனங்களை வழிமறித்து உணவு தேடிய யானை.

கோ்மாளம் வனச் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து ஒற்றை காட்டு யானை உணவு தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதி வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம் - கொள்ளேகால் சாலை உள்ளது.

அடா்ந்த வனப் பகுதியில் உள்ள இந்த சாலையில் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கோ்மாளம் அருகே வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திங்கள்கிழமை உலவியது.

பின்னா், அவ்வழியே வந்த வாகனங்களை மறித்த யானை உணவு தேடியது. உணவு ஏதும் கிடைக்காத நிலையில், சிறிது நேரம் கழித்து தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டுநா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். தற்போது, அந்த விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com