தாளவாடி அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

 தாளவாடி அருகே உலவிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் இருந்த வீட்டை சேதப்படுத்தியது.
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை.
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை.

 தாளவாடி அருகே உலவிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் இருந்த வீட்டை சேதப்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது.

வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், தலமலை வனத்தை ஒட்டியுள்ள மாவநத்தம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த கணேசன் என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. தொடா்ந்து, தோட்டத்தில் உலவிய யானை அங்கிருந்த வீட்டை சேதப்படுத்தியது.

இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் யானை நகராமல் அதே இடத்தில் நின்றது. சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை வனப் பகுதிக்குள் சென்றது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com